செவ்வாய், 16 நவம்பர், 2010

கிறிஸ்மஸ் விழா 2010 பேச்சு

கிறிஸ்மஸ் விழா ஒரு மகிழ்ச்சி விழா இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் யூதேயா நாட்டின் பெத்தேலேகம் என்ற ஊரில் மாட்டுத்தொழுவத்தில்  இறைமகன் மனு உரு எடுத்து கன்னிமரியின் வயிற்றில் அவதரித்த நாள் இறைவன் தனது மகனாகிய கிறிஸ்துவை மீட்பராக உலகுக்கு அளித்த பெரு விழா . இறைவன் மனிதனோடு பாவம் தவிர அனைத்திலும் பங்கெடுத்து உரிமை வழங்கியநாள். இதைத்தான் ஆண்டு தோறும் கிறிஸ்தவர்கள் குதூகலத்துடன் கிறிஸ்மஸ் விழா எனக் கொண்டாடுகின்றனர். 
                                                            மண்ணின் மன்னாகப் பிறக்காமல் மனித மனங்களை வென்றிடும் அன்பு மன்னாகப் பிறந்தார். 2000 ஆண்டுகள் கடந்த பின்னும் நவீன ஆயுத ஒலிகள் மத்தியிலும் யேசு பாலனின் வருகை உலகமெல்லாம் கொண்டாடப்படுகிறது.ஆகவே அன்புக்கு விழா எடுப்பதுதானே கிறிஸ்மஸ் . அன்பை பிறருக்கு பகிர்ந்தளிப்பதுதானே கிறிஸ்மஸ். எங்கெல்லாம் அன்பு இருக்கின்றதோ அங்கெல்லாம் கிறிஸ்மஸ். எங்கெல்லாம் அன்புறவு உருவாகின்றதோ அங்கெல்லாம் கிறிஸ்து பிறக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக