செவ்வாய், 5 மார்ச், 2013

annaiyar thenam

                                      உழைக்கும் இமயம்

என்னை பெற்றவுடன்   அம்மா
தன்னை மறந்த அம்மா 
கண்ணை போன்ற அம்மா
கருணை பொங்கும் அம்மா

விரும்பும் பொம்மை கேட்டால்
விரைந்து வாங்கும் அம்மா

மருந்து எனக்கு தந்து
வலிமை யாக்கும் அம்மா
 அருந்தும்  உணவோடு
அன்பையும் பொழியும் அம்மா

குறும்பு நானும் செய்தால்
 குட்டு போடும் அம்மா

எனக்கு நன்மை செய்தே
நித்தம் மகிழும் அம்மா
ஓய்வு ஒழிச்சல் இன்றி
உழைக்கும் இமயம்  அம்மா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக