வியாழன், 18 அக்டோபர், 2012

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

thirukal



1     அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
               
பகவன் முதற்றே உலகு
      With alpha begins all alphabets;
      And the world with the first Bagavan.



 எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

2      குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
       
மழலைச்சொல் கேளா தவர்.
   ‘The pipe is sweet,’ ‘the lute is sweet,’ by them’t will be averred,,,
   Who music of their infants’ lisping lips have never heard
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை யது என்று இனிகூறுவர்.
3        கற்க கசடறக் கற்பவை கற்றபின்
        
நிற்க அதற்குத் தக.
     So learn that you may full and faultless learning gain,
    Then in obedience meet to lessons learnt remain.
பிறகு, கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்


4      மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
      
என்நோற்றான் கொல்எனும் சொல்.
    To sire, what best requital can by grateful child be done?
   To make men say, ‘What merit gained the father such a son?’
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்

5       ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
        
சான்றோன் எனக்கேட்ட தாய்.
       When mother hears him named ‘fulfill’d of wisdom’s lore,’
       Far greater joy she feels, than when her son she bore.
jன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்
6    காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
      ஞாலத்தின் மாணப் பெரிது.
        A timely benefit, -though thing of little worth,,,
    The gift itself, -in excellence transcends the earth
itself, -in excellence transcends the earth

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.


7       அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
         ஆரிருள் உய்த்து விடும்
       Control of self does man conduct to bliss th’ immortals share;
      Indulgence leads to deepest night, and leaves him there.
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.


8      ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
        உயிரினும் ஓம்பப் படும்.
      Decorum’ gives especial excellence; with greater care
    ‘Decorum’ should men guard than life, which all men share
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்


9      அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
         இகழ்வார்ப் பொறுத்தல் தலை
  தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல்,          தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்
As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.
 Kural Explanation: To bear with those who revile us, just as the earth bears up those who





dig it, is the first of virtues.
10         அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
             புன்கணீர் பூசல் தரும்.
 அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்
And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover’s secret plain.


Kural Explanation: Is there any fastening that can shut in love ? Tears of the afectionate will publish the love that is within.
11       அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
          மறத்திற்கும் அஃதே துணை.
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது
The unwise deem love virtue only can sustain,,,
It also helps the man who evil would restra 
Kural Explanation: The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.
12     தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
         முந்தி இருப்பச் செயல்
   தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர்    கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
Sire greatest boon on son confers, who makes him meet,
In councils of the wise to fill the highest seat. 
Kural Explanation: The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.




13       பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
            இறைவன் அடிசேரா தார்
 இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது
They swim the sea of births, the ‘Monarch’s’ foot who gain;
None others reach the shore of being’s mighty main
Kural Explanation: None can swim the great sea of births but those who are united to the feet of God.
14       கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
            நற்றாள் தொழாஅர் எனின்
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
No fruit have men of all their studied lore,
Save they the ‘Purely Wise One’s’ feet adore.
Kural Explanation: What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?
15      அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
       புறத்த புகழும் இல.
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
What from virtue floweth, yieldeth dear delight;
All else extern, is void of glory’s light. 
Kural Explanation: Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.