திங்கள், 27 செப்டம்பர், 2010














































தமிழ்மொழி வாழ்த்து (பாடசாலை கீதம்)

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே
வானம் அளந்ததனைத்தும் அளந்திடும்
வண் மொழி வாழியவே

ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்க தமிழ் மொழி ஒங்கத்
துலங்குக வையகமே
தொல்லை வினை தரு தொல்லையகன்று
சுடர்க தாய் நாடே
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே
வானம் அளந்ததனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழியவே

எண்களில் தோன்றிய என் எண்ணங்கள்(பவிசன் )

ஒன்றே ஒன்று
ஒருவனே தேவன் என்று நீயும் நம்பு

ஒன்றும் ஒன்றும் இரண்டு
ஒன்றாய் சேர்வீர் திரண்டு

இரண்டும் ஒன்றும் மூன்று
இயல் இசை நாடகம் என
முத்தமிழ் மூன்று என முழங்கு

மூன்றும் ஒன்றும் நான்கு
நாலும் தெரிந்தவன் நீ என
நானிலத்தில் நற்பெயர் வாங்கு

ஐந்தும் ஒன்றும் ஆறு
ஆறாம் ஆறிவைத்தேடு

ஆறும் ஒன்றும் ஏழு
ஏழு பிறப்பும் நாட்டுப்பற்றோடு எழு

ஏழும் ஒன்றும் எட்டு
எட்டு திக்கும் செல்
தமிழ் செல்வங்கள் யாவும் கொணர்ந்து
இங்கு கொட்டு

எட்டும் ஒன்றும் ஒன்பது
இருப்பதை பகிர்ந்து உண்பது
என உன் வாழ்வில் உறுதி கொள்

ஒன்பதும் ஒன்றும் பத்து
பரமன் பாதத்தை பற்று.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

திருமகள்களின் பேட்டித் தொடர்

சாதனா...... சரி தாயே நன்றி . அறிவாற்றலாலேயே அனைத்தையும் சாதிக்கலாமென அறிவுறுத்தினாள் கலைமகள். இவ்விடத்தில் மகாகவியின் பாடல் ஒன்றுநினைவுக்கு வருகின்றது .பிள்ளைப்பிராயத்திலே கலைமகளின் பெண்மையைக்கண்டு மயங்கி விட்டேன் அவள் உருவம்கண்டு வெள்ளை மனது பறிகொடுத்தேன் எனக்கலைமகள் அழகை அழகாக வர்ணித்திருந்தார்.
அடுத்து இலட்சுமி தாயே  வணக்கம். தங்களை MOON  தொலைக்காட்சி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்.

சாம்பவி.....            என்னை இலக்குமி திருமகள் என்று அழைப்பார்கள் செல்வத்திற்கு  அதிபதி நான்தான்.

சாதனா               தாயே வேதாந்திகள் பணத்தை குறைகூறுகின்றார்களே  பணம் நிலையற்றது அது ஒரு நாள் தன்னை  நம்பியவர்களை விட்டு செல்வதனால் அதற்கு செல்வம் என்று பெயர் ஏற்பட்டதாகவும் வாதிடுகிறார்களே இது பற்றி தங்களின் கருத்துயாது.    

சாம்பவி                பணம் இல்லாமல் உலகம் அழிந்து போவதைக்கண்டால் அதே வேதாந்திகள் ஐயோ செல்வத்தை ஈட்டுங்கள்  உலகம் அழிகிறது என கூப்பாடு போடுவார்கள். செல்வம் என்பதை பிழையாக விளங்கிக்
கொள்கிறார்கள். சிந்தையின் நிறைவே செல்வம்.                                                 அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால்  அற்குப ஆங்கே செயல்.
அதாவது செல்வோம் என புறப்படத்தாயராகும் அச்செல்வத்தை கொண்டு நல்ல செயல்களைச் செய்து அதன் வெளியேற்றத்தை தடுக்க வேண்டும்என வள்ளுவப்பெருந்தகை கூறுகின்றார். இதனை வேதாந்திகள் புரிந்து கொண்டால் சரி.

சாதனா               ஒரு வேளை பணம் பாதாளம் வரை பாயலாம்.ஆனால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும் எங்கும் சொல்லப்பட
வில்லையே.வாழ்க்கைக்கு பணம் வளமான ஊற்றுதான். உலகிலுள்ள அனைத்தையும் பெறுவதற்கு அடிப்படையாக அமைவது செல்வம்தான். ஆனால் அதனை முறையாக ஈட்ட வேண்டும்.  பணம் வாழ்வின் ஒரு துணை வாழ்க்கையை அதற்குள் அடகு வைக்கக்கூடாது. பணத்தின் வழியாக இம்மை மறுமைப் பயன்களைத் தேடுவதே மகத்தான பண்பாகும்.

சாதனா                    அடுத்து துர்க்கா தேவியே வணக்கம்.  MOON தொலைக்காட்சி நேயர்களுக்கு தங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

துர்க்கா                வணக்கம். என்னை காளி மலைமகள் பாராசக்தி வெற்றித்தாய் என பல பெயரிட்டு அழைப்பார்கள். வீரத்திற்கு அதிபதி நான் உங்கள் உலகைச் சேர்ந்த மகாகவி  பாரதியார் என்னைப்பற்றி பாடிய ஓர் வரி இன்னும் என் செவிகளை இனிமையாக்கிய வண்ணம் உள்ளது.   பின் ஓர் இரவில் கரிய பெண் அழகி ஒருத்தி வந்தாள். சற்றே அருகிற் சென்று பார்த்தேன். அன்னை வடிவம் அவள். இவள் ஆதி பாராசக்தி அவள் இன்னருள் வேண்டும் பின் யாவும் உலகில் வசப்பட்டுப் போமடா   

சாதனா                   பாடல் அழகாகவே உள்ளது. மகாகவி அல்லவா அவர். தாயே சிலர் கத்தியை தீட்டாதே  உன்தன் புத்தியை தீட்டு என்கிறார்களே அப்படியானால் வீரம் எதற்கு. ?


துர்க்கா               அது சரி கத்தி தான் வீரம் ஆயுத பலம்தான் வீரம்    என்ற தவறான அணுகு முறை உள்ளதுதான்.அது தவறு மன வலிமையும் புத்தி சாதுரியமும்தான் உண்மையான வீரம். இதுதான் இன்றைய ஆயுத கலாச்சாரத்திலிருந்து விலகி நடந்தால் வெற்றிகளை கொணர்ந்து குவிக்கும்.இதனை நீங்கள் நேசிக்கும் தமிழ் ஈழத்தில் கண்டு தானே வருகின்றீர்கள்.  மெலியாரை வலியார் அடக்குவது வீரமாகாது.

சாதனா              தாயே வெற்றி வேண்டுமானால் வீரம் விளையாட வேண்டும் என்கிறார்களே அதன் விளக்கம்

துர்க்கா            ஆமாம் நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் பெற்று மக்கள் அந்நிய ஆட்சிக்கு எதிராக போராட வேண்டும். வீரம் ஒளி வீசும் உலகில் வீரம் இருந்தால் தான் மனிதம் மதிக்கப்படும். உரிமைகள் கிடைக்கும். வீரம் அறத்தோடும் அன்போடும் பிணைக்கப்பட்டுள்ளது.நல்லவரானால் நல் உபதேசம் . பகைவரானால் வாள் முனையில் சந்திப்பு.


சாதனா கொற்றவைத்தாயே அறத்தையும் மறத்தையும் புலப்படுத்தவே  வாயில் வேதமும் கையில் வாளும் கொண்டுள்ளாய். நாமும் அறத்தோடு சேர்ந்த வீரத்தை விளைத்தே விடுதலையை  வென்றிடுவோம். விடுதலையின் காப்பு வீர உணர்ச்சிதான். அந் மாவீரத்தை போதிக்கும் வீரத் தாயே  உனக்கு வீர வணக்கங்கள் MOON தொலைக்காட்சி நிலையத்தார்  சார்பில் நன்றி கூறி விடை பெறுகின்றேன்.

ஆக்கம் திருமதி ஆன் பிரான்சிஸ்

திருமகள்களின் பேட்டி

சாதனா.         MOON   தொலைக்காட்சி  நேயர்களுக்கு எனது வணக்கம்.  இன்று வாணி விழா.  சிறிது வித்தியாசமாக வானத்திலிருந்து வாணி விழாவை முன்னிட்டு மூவர் இந்நிலையத்திற்கு  வந்துள்ளனர் . அவர்களை     MOON
தொலைக்காட்சி நேயர்களுக்காக பேட்டி காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
    வணக்கம்  சரஸ்வதி தாயே ! MOON  தொலைகாட்சி  நிலையத்தார் சார்பிலும் நேயர்கள் சார்பிலும் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.  தங்களை முதலில் நேயர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளுங்கள். 
 

விஸ்ணுயா.....    வணக்கம் நான்தான் கல்வி தெய்வம் சரஸ்வதி தேவி. என்னை கலைமகள் என்றும் அழைப்பர்.

சாதனா....  தாங்கள் பூவுலகம் நோக்கி வரக் காரணம் .

விஸ்ணுயா..... தமிழர்கள் விழா எடுப்பதில் விண்ணர்கள். ஆனால் அவ்விழாவுக்கான கருவை கோட்டைவிட்டுவிடுவார்கள்  நிறைய முறைப்பாடுகள்  வானகத்திற்கு வந்து குவிந்துள்ளன.எனவே எமது பொறுப்பாளர்  எம்மை நேரில் சென்று பார்த்து வரும்படி அனுப்பினார். இடையில் உங்கள் தொலைக்காட்சி நிலையத்தார் கமராவுடன் அலைந்தனர் கண்களில் நாம் பட நம்மை இங்கு கொண்டு வந்து விட்டனர்.

சாதனா.......  சரி முறைப்பாடுகள் என்கிறீர்களே அவை என்ன என நேயர்களுக்கு விளக்குவீர்களா?

விஸ்ணுயா..... கைப்பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி  என்று உங்கள் ஔவைப்பாட்டியே  கொன்றை வேந்தனில் சொல்லியுள்ளார்.  அதாவது கையிலுள்ள  செல்வத்தைக்காட்டிலும்  கல்வியே சி்றந்தது என்பது இதன் பொருள். ஆனால் இன்றைய மனிதன் கல்வியையே விலை பேசுகிறான்.

சாதனா....... இதில் தவறு என்ன சரஸ்வதி தாயே      இன்றைய உலகு பொருள் முதல் வாத உலகு . காசேதான் கடவுளடா அது கடவுளுக்கும் தெரியுமடா என ஒரு கவிஞன் பாடியுள்ளான்.  கூழுக்காக கவி பாடியவள் தானே ஔவைப்பாட்டி. ஆடையின்றி வாடையில் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்தி பேழையுள்  இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனைக்கண்டனம்  என்று கூறுவாய் என செங்கால் நாரைஎன்னும் பறவையை தூவிட்ட சக்தி முற்றப்புலவரின்  தாங்கள் அறியாததல்ல.ஒருவேளை கஞ்சிக்காக வைத்திருந்த ஒரு பிடி நெல்லையும்
குருவிகளுக்காக போட்டு  விட்டு கவிதையையே வயிற்றுக்கு உணவாக்கிய மாகாகவி பாரதியாரின் ஏழ்மையின் துடிப்பைதாங்கள் உணர்ந்தவர் தானே ஆகவே ஏட்டைக் கையிலெடுத்த பல புலவர்களுக்கு எல்லாம் தாங்கள் திருவோட்டைத்தானே  பரிசளித்தீர்கள்.

விஸ்ணுயா......  இல்லை இல்லை நல்வாழ்வின் அடிப்படை கல்விதான் நீங்கள் எடுத்துக்காட்டிய இதே புலவர்களுக்காக பெருஞ் செல்வமும் படைபலமும் கொண்ட அரசர்களே தலை வணங்கியுள்ளனர். ஒருவரின் வாழ் நாள் அதிகரிப்பதென்பது  அரிது.   அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது அத்தகைய வாழ் நாளை அதிகரிக்கும் ஒரே ஒரு நெல்லிக்கனியை தான் உண்ணாமல் கல்வியிற் சிறந்த ஔவையாருக்கே அளித்து கல்வியை சிறப்பித்தான்  அதியமான் என்னும் அரசன்.செங்கல் நாரை தூது செல்ல முன்பே பாண்டிய அரசன் சத்தி முற்ற புலவரின் வறுமையை போக்கி புலவரின் அருமையை உணர்ந்தான், முடியுடை மூவேந்தர் முதற்கொண்டு பலரும் தம் அரண்மனைகளில் கல்விமான்களுக்கே முதலிடம் அளித்து கல்வியை சிறப்பித்த எத்தனையோ வரலாறு நம்மிடையே உண்டு .ஆனால் இன்றைய தமிழன் படிப்பு வேறு வாழ்க்கை வேறு என பிரித்து வாழ்கிறான். கல்வியைக் கொண்டு  வாழ்க்கைக்கு தேவையான செல்வம் உட்பட அனைத்தையும் சம்பாதிக்க முடியும். ஆனால் அவர்கள் தவறாக பயன் படுத்துவதைக்கண்டிக்கவே வந்தோம்.
தொடரும்

 

சனி, 25 செப்டம்பர், 2010

புதிய அறிவித்தல்கள்

சரஸ்வதி பூசை     17.10.2010 அன்று பாடசாலை மட்டத்தில் நடை பெறும்.
14.11.2010     அன்று     திருக்குறள் போட்டிகள் நடை பெறும்.வெற்றி பெறுபவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படும்.   வெற்றி பெற்றவர்களின்     படங்கள் இங்கு பிரசுரிக்கப்படும். 

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

பாடங்களின் நேர அட்டவணை

நேரம்                                             பாடங்கள்

10.00- 11.45                          தமிழும்                சமயமும்   
    

11.45-  12.00                                இடை வேளை


12.00-  12.45     நடனம்      சுரத்தட்டு 1       கணிதம் 1             கணிதம்11


12.45--13.30     வாய்ப்பாட்டு    சுரத்தட்டு 11   விஞ்ஞானம்    ஆங்கிலம் 1
     

13.30--14.15    வயலின்      சுரத்தட்டு 111      ஆங்கிலம்11      மிருதங்கம் 

சனி, 11 செப்டம்பர், 2010

விண்ணப்படிவம்

மிழ்க் கல்விக்கூடத்தில் சேருவதற்கான மாணவர் விண்ணப்படிவம்
                                                                                             (சவுத்கரோ தமிழ்க்கல்விக்கூடம்)

 1. மாணவர் பெயர்   தமிழ் எழுத்துக்களில்-----------------------
      ஆங்கில எழுத்துக்களில்-------------------------------------
 2.பிறந்த நாள்         ------------------------------------------------------------------------------------
                                          (பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இணைத்தல் வேண்டும்)

3.பால்             ஆண்                             பெண்                            பிறந்த இடம்
4  மாணவரின் தந்தையின் பெயர்      தமிழ் எழுத்துக்களில் ----------------------------------

                                                                                ஆங்கில எழுத்துக்களில்------------------------
5. மாணவரின் தாயார்  பெயர்   தமிழ்எழுத்துக்களில்--------------------------
                                                               ஆங்கில எழுத்துக்களில்--------------------------
6  மாணவரின் பாதுகாவலர் பெயர்  தமிழ் எழுத்துக்களில் ------------------------------
                                                                            ஆங்கில எழுத்துக்களில்---------------------------
7.  வதிவிட முகவரி    ஆங்கிலத்தில் --------------------------------
8.  தொலைபேசி இலக்கம்----------------------------------
9  கைத் தொலைபேசிஇலக்கம்---------------------
 10கற்கவிரும்பும் பாடம்             தமிழ் மொழி            நடனம்                  வயலின்                   சுரத்தட்டு

                                                                      வீணை                சங்கீதம்                      மிருதங்கம்            விஞ்ஞானம்





                                                                      கணிதம்                 ஆங்கிலம்
இந்த விண்ணப்படிவத்தில் தரப்பட்டுள்ள விபரங்கள் யாவும் சரியென உறுதி செய்கின்றேன்.


                                               திகதி                                               பெற்றோர் பாதுகாவலர் ஓப்பம்





 

                      
   




 

                                                                              

 

திருக்குறள் (விருந்தோம்பல் 11- 20)

11.இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற்பொருட்டு.

12.விருந்து  புறத்தாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

13.வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று

14அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
   நல்விருந்து ஓம்புவான் இல்

15.வித்தும் இடல் வேண்டும்  கொல்லோ விருந்தோம்பி
      மிச்சல் மிசைவான் புலம்

16. செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
       நல்விருந்து வானத் தவர்க்கு

17. இனைத்துணைத் தென்பதொன்றில்லை விருந்தோம்பி
      துணைத்துணை வேள்விப்பயன்

18.  பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படாதார்




19.  உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார் கண் உண்டு.


20. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
   நோக்கக்குழையும் விருந்து

 



 

Thrukkural English

1.And is there bar that can even love restrain
  The tiny tear shall make the lover's secret plain

Is there any fasting that can shut in love ? Tears of the affectionate will publish the love that is with in

2.The loveless to themselves belong alone
  The loving men are others' to the very bone.

Those who are destitute of love appropriat all they to have to themselves .but those who possess love consider even their bones to belong to others.

3.Of precious soul with body' s flesh and bone,
   The union yields one fruit the life of jove alone

They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in former birth)

4. From love fond yearning springs for unioon sweet of minds;
    And that the bond of rare excelling friendship binds.

Love begets desire: and that (desire) begets the immeasurable excellence of friendship

5. Sweetness on earth and rarest bliss above,
    These are the fruits of tranquil life of love.

They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love.

6. The unwise deem love virtue only can sustain,
    It also helps the man who evil would restrain.

The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.

7. As sun's fierce ray dries up the boneless things,
    So loveless beings virtue's power to nothing brings.

Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms.

8. The loveless soul, the very joys of life may know,

    When flowers, in barren soil, on sapless trees, shall blow.


The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.


9.Though every out ward part complete the boad 's fitly framed
  What good when soul within of love devoid lies halt and maimed

Of what avail are all the external members (ofthe boad ) to those who are destitute of love the internal member.


10.Boadies of loveless men are bony framework clad with skin
Then is the boad seat of life when love resieds within

That boad alone which is inspired with love contains a living soul if void of it (the boad) is bone over laid with skin

11.Allhousehold cares and course of daily life have this in view
     guests to recevie with courtesy and kindly acts todo

 The whole desingn of living inthe domestic state and laying up (property ) is (to be able) to exercise the benevolence of hospitality.

12. Though food of ommortality should crown the board
       Feasting alone the guests without unfed is thing abhorred

It is not fit that one should wish his guests tobe out side (his house) even house) even thoug he were eating the food of mimortalitty.

13.Each day he tends the coming guest with kindly care
     Painnless unfailing plenty shall his household share

The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.

14.With smiling face he entertains  each virtuous guest
     Fortune with gladsome mind shall in his dewelling rest

   Lakshmi with Joyousbmind shall dwell inthe house of thatman who with cheerful countenance entertains       the good as guests.

15.Who first regales his guest, and then himself supplies,
      O'er all his fields, unsown, shall plenteous harvest rise

    
Is it nescessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain?

16.The guest arrived he tends, the coming guest expects to see;
     To those in heavenly home that dwell a welcome guest is he

He who having entertainmed the guests that have come looks out for others who may yet come will be a welcome guest to the inhabitants of heaven

 17. To reckonup the furit of kindly deeds were all in vain
       Their worth is as the worth of guests you entertain


The advantages of benevolence cannot be measured the measure (of the virtue ) of the guests (entertained)
is the only measure

18.with pain they guard their stores,yet'All forlorn are we,'they'll cry,
Who cherish not their guests, not kindly help supply.

Those who have taken no part in the benevolence of hospitality shall (at lenght lament) saying, " we have laboured and laid up wealth and are now without support."

19. To turn from guests is penury, though wordly goods abound;
'Tis senseless folly, only with the senseless found.

That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.

20. The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale; If the face of the host cold welcome convey. The guest's heart within him will fail.

As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.


 
     


 









 

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

இலையுதிர்கால பாடசாலை நாட்கள் 2010

தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் --இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்

05.09.2010                        பாடசாலை நடைபெறும்

12.09.2010                         பாடசாலை நடைபெறும்

19..09.2010                       பாடசாலை நடைபெறும்

26..09.2010                      பாடசாலை நடைபெறும்

03.10.2010                       பாடசாலை நடைபெறும்

10.10.2010                       பாடசாலை நடைபெறும்

17.10.2010                      பாடசாலை நடைபெறும்

24.10.2010                            விடுமுறை

31.10.2010                            விடுமுறை

07.11.2010                       பாடசாலை நடைபெறும்

14.11.2010                       பாடசாலை நடைபெறும்

21.11.2010                       பாடசாலை நடைபெறும்.

28.11.2010                             விடுமுறை

05.12.2010                       பாடசாலை நடைபெறும்

12.12.2010                       பாடசாலை நடைபெறும்

பாடமாக்கவேண்டிய குறள்கள் தமிழில்

அன்புடமை பத்து குறள்கள் 

1.அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் 
       புன் கணீர்  பூசல்  தரும்.

2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
      என்பும் உரியர்  பிறர்க்கு

3.அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு 
         என்போடு இயைந்த தொடர்பு 

4.  அன்பு ஈனும் ஆர்வம் உடமை அது ஈனும் 
            நண்பென்னும் நாடாச்சிறப்பு

5.        அன்புற்று அமரந்த வழக்கென்ப வையகத்து
             இன்புற்றார் எய்தும் சிறப்பு

6.          அறத்தி ற்கே  அன்புசார்பென்பஅறியார்
                    மறத்திற்கும் அஃதே துணை

7        என்பி லதனை வெயில் போலக்   காயுமே 
           அன்பிலதனை  அறம்

8.        அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
             வற்றல் மரந்தளிர்த் தற்று

9.         புறத்துறப்பெல்லாம்  எவன்செய்யும் யாக்கை
           அகத்துறுப்பு அன்பிலவர்க்கு

10.       அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
              என்புதோல் போர்த்த உடம்பு




 


திருக்குறள் விதிகள்

1 தமிழ்க்கல்விக்கூட மாணவர்கள் மட்டுமே பங்குபற்றலலாம்.
2.ஐப்பசி மாத இறுதியில் நடைபெறும். திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
3.வயது எல்லைபற்றி குழம்ப வேண்டாம். பிறந்த ஆண்டு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும்.
4.ஆங்கிலத்திலும் தமிழிலும் மனனம் செய்ய வேண்டும்.
5.ஒவ்வொரு குழுவிலும்  முதல் மூன்று இடங்களை பெறுபவர்க்கு பரிசில்கள் வழங்கப்படும்.ஆனால் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
6.கருத்துக்கள் தரப்படின் விசேட புள்ளிகள் வழங்கப்படும்.
            பங்கு பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். 2009ல் பங்கு பற்றி      வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிறிஸ்மஸ் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
              வயதுப்பிரிவு                                                       குறள்கள்
            3    5         2007 2006 2005                                              1 --   2     ஆங்கிலம் தமிழ்

             6   8          2004 2003 2002                                              3       5          *                   *
    
            9   11        2001 2000 1999                                               6      9            *                   *

            12 14       1998 1997 1996                                                10    14         *                   *

            15   17     1995 1994 1993                                                15    20         *                    *