வெள்ளி, 10 செப்டம்பர், 2010

பாடமாக்கவேண்டிய குறள்கள் தமிழில்

அன்புடமை பத்து குறள்கள் 

1.அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் 
       புன் கணீர்  பூசல்  தரும்.

2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
      என்பும் உரியர்  பிறர்க்கு

3.அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு 
         என்போடு இயைந்த தொடர்பு 

4.  அன்பு ஈனும் ஆர்வம் உடமை அது ஈனும் 
            நண்பென்னும் நாடாச்சிறப்பு

5.        அன்புற்று அமரந்த வழக்கென்ப வையகத்து
             இன்புற்றார் எய்தும் சிறப்பு

6.          அறத்தி ற்கே  அன்புசார்பென்பஅறியார்
                    மறத்திற்கும் அஃதே துணை

7        என்பி லதனை வெயில் போலக்   காயுமே 
           அன்பிலதனை  அறம்

8.        அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
             வற்றல் மரந்தளிர்த் தற்று

9.         புறத்துறப்பெல்லாம்  எவன்செய்யும் யாக்கை
           அகத்துறுப்பு அன்பிலவர்க்கு

10.       அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
              என்புதோல் போர்த்த உடம்பு




 


1 கருத்து:

  1. ஏழாவது குறள் திருத்தப்பட்டுள்ளது. கவனிக்கவும். தவறை சுட்டிகாட்டிய திருமதி சோதிலிங்கத்திற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு