ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

திருமகள்களின் பேட்டி

சாதனா.         MOON   தொலைக்காட்சி  நேயர்களுக்கு எனது வணக்கம்.  இன்று வாணி விழா.  சிறிது வித்தியாசமாக வானத்திலிருந்து வாணி விழாவை முன்னிட்டு மூவர் இந்நிலையத்திற்கு  வந்துள்ளனர் . அவர்களை     MOON
தொலைக்காட்சி நேயர்களுக்காக பேட்டி காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
    வணக்கம்  சரஸ்வதி தாயே ! MOON  தொலைகாட்சி  நிலையத்தார் சார்பிலும் நேயர்கள் சார்பிலும் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.  தங்களை முதலில் நேயர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளுங்கள். 
 

விஸ்ணுயா.....    வணக்கம் நான்தான் கல்வி தெய்வம் சரஸ்வதி தேவி. என்னை கலைமகள் என்றும் அழைப்பர்.

சாதனா....  தாங்கள் பூவுலகம் நோக்கி வரக் காரணம் .

விஸ்ணுயா..... தமிழர்கள் விழா எடுப்பதில் விண்ணர்கள். ஆனால் அவ்விழாவுக்கான கருவை கோட்டைவிட்டுவிடுவார்கள்  நிறைய முறைப்பாடுகள்  வானகத்திற்கு வந்து குவிந்துள்ளன.எனவே எமது பொறுப்பாளர்  எம்மை நேரில் சென்று பார்த்து வரும்படி அனுப்பினார். இடையில் உங்கள் தொலைக்காட்சி நிலையத்தார் கமராவுடன் அலைந்தனர் கண்களில் நாம் பட நம்மை இங்கு கொண்டு வந்து விட்டனர்.

சாதனா.......  சரி முறைப்பாடுகள் என்கிறீர்களே அவை என்ன என நேயர்களுக்கு விளக்குவீர்களா?

விஸ்ணுயா..... கைப்பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி  என்று உங்கள் ஔவைப்பாட்டியே  கொன்றை வேந்தனில் சொல்லியுள்ளார்.  அதாவது கையிலுள்ள  செல்வத்தைக்காட்டிலும்  கல்வியே சி்றந்தது என்பது இதன் பொருள். ஆனால் இன்றைய மனிதன் கல்வியையே விலை பேசுகிறான்.

சாதனா....... இதில் தவறு என்ன சரஸ்வதி தாயே      இன்றைய உலகு பொருள் முதல் வாத உலகு . காசேதான் கடவுளடா அது கடவுளுக்கும் தெரியுமடா என ஒரு கவிஞன் பாடியுள்ளான்.  கூழுக்காக கவி பாடியவள் தானே ஔவைப்பாட்டி. ஆடையின்றி வாடையில் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்தி பேழையுள்  இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனைக்கண்டனம்  என்று கூறுவாய் என செங்கால் நாரைஎன்னும் பறவையை தூவிட்ட சக்தி முற்றப்புலவரின்  தாங்கள் அறியாததல்ல.ஒருவேளை கஞ்சிக்காக வைத்திருந்த ஒரு பிடி நெல்லையும்
குருவிகளுக்காக போட்டு  விட்டு கவிதையையே வயிற்றுக்கு உணவாக்கிய மாகாகவி பாரதியாரின் ஏழ்மையின் துடிப்பைதாங்கள் உணர்ந்தவர் தானே ஆகவே ஏட்டைக் கையிலெடுத்த பல புலவர்களுக்கு எல்லாம் தாங்கள் திருவோட்டைத்தானே  பரிசளித்தீர்கள்.

விஸ்ணுயா......  இல்லை இல்லை நல்வாழ்வின் அடிப்படை கல்விதான் நீங்கள் எடுத்துக்காட்டிய இதே புலவர்களுக்காக பெருஞ் செல்வமும் படைபலமும் கொண்ட அரசர்களே தலை வணங்கியுள்ளனர். ஒருவரின் வாழ் நாள் அதிகரிப்பதென்பது  அரிது.   அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது அத்தகைய வாழ் நாளை அதிகரிக்கும் ஒரே ஒரு நெல்லிக்கனியை தான் உண்ணாமல் கல்வியிற் சிறந்த ஔவையாருக்கே அளித்து கல்வியை சிறப்பித்தான்  அதியமான் என்னும் அரசன்.செங்கல் நாரை தூது செல்ல முன்பே பாண்டிய அரசன் சத்தி முற்ற புலவரின் வறுமையை போக்கி புலவரின் அருமையை உணர்ந்தான், முடியுடை மூவேந்தர் முதற்கொண்டு பலரும் தம் அரண்மனைகளில் கல்விமான்களுக்கே முதலிடம் அளித்து கல்வியை சிறப்பித்த எத்தனையோ வரலாறு நம்மிடையே உண்டு .ஆனால் இன்றைய தமிழன் படிப்பு வேறு வாழ்க்கை வேறு என பிரித்து வாழ்கிறான். கல்வியைக் கொண்டு  வாழ்க்கைக்கு தேவையான செல்வம் உட்பட அனைத்தையும் சம்பாதிக்க முடியும். ஆனால் அவர்கள் தவறாக பயன் படுத்துவதைக்கண்டிக்கவே வந்தோம்.
தொடரும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக