சாதனா...... சரி தாயே நன்றி . அறிவாற்றலாலேயே அனைத்தையும் சாதிக்கலாமென அறிவுறுத்தினாள் கலைமகள். இவ்விடத்தில் மகாகவியின் பாடல் ஒன்றுநினைவுக்கு வருகின்றது .பிள்ளைப்பிராயத்திலே கலைமகளின் பெண்மையைக்கண்டு மயங்கி விட்டேன் அவள் உருவம்கண்டு வெள்ளை மனது பறிகொடுத்தேன் எனக்கலைமகள் அழகை அழகாக வர்ணித்திருந்தார்.
அடுத்து இலட்சுமி தாயே வணக்கம். தங்களை MOON தொலைக்காட்சி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்.
சாம்பவி..... என்னை இலக்குமி திருமகள் என்று அழைப்பார்கள் செல்வத்திற்கு அதிபதி நான்தான்.
சாதனா தாயே வேதாந்திகள் பணத்தை குறைகூறுகின்றார்களே பணம் நிலையற்றது அது ஒரு நாள் தன்னை நம்பியவர்களை விட்டு செல்வதனால் அதற்கு செல்வம் என்று பெயர் ஏற்பட்டதாகவும் வாதிடுகிறார்களே இது பற்றி தங்களின் கருத்துயாது.
சாம்பவி பணம் இல்லாமல் உலகம் அழிந்து போவதைக்கண்டால் அதே வேதாந்திகள் ஐயோ செல்வத்தை ஈட்டுங்கள் உலகம் அழிகிறது என கூப்பாடு போடுவார்கள். செல்வம் என்பதை பிழையாக விளங்கிக்
கொள்கிறார்கள். சிந்தையின் நிறைவே செல்வம். அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால் அற்குப ஆங்கே செயல்.
அதாவது செல்வோம் என புறப்படத்தாயராகும் அச்செல்வத்தை கொண்டு நல்ல செயல்களைச் செய்து அதன் வெளியேற்றத்தை தடுக்க வேண்டும்என வள்ளுவப்பெருந்தகை கூறுகின்றார். இதனை வேதாந்திகள் புரிந்து கொண்டால் சரி.
சாதனா ஒரு வேளை பணம் பாதாளம் வரை பாயலாம்.ஆனால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும் எங்கும் சொல்லப்பட
வில்லையே.வாழ்க்கைக்கு பணம் வளமான ஊற்றுதான். உலகிலுள்ள அனைத்தையும் பெறுவதற்கு அடிப்படையாக அமைவது செல்வம்தான். ஆனால் அதனை முறையாக ஈட்ட வேண்டும். பணம் வாழ்வின் ஒரு துணை வாழ்க்கையை அதற்குள் அடகு வைக்கக்கூடாது. பணத்தின் வழியாக இம்மை மறுமைப் பயன்களைத் தேடுவதே மகத்தான பண்பாகும்.
சாதனா அடுத்து துர்க்கா தேவியே வணக்கம். MOON தொலைக்காட்சி நேயர்களுக்கு தங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
துர்க்கா வணக்கம். என்னை காளி மலைமகள் பாராசக்தி வெற்றித்தாய் என பல பெயரிட்டு அழைப்பார்கள். வீரத்திற்கு அதிபதி நான் உங்கள் உலகைச் சேர்ந்த மகாகவி பாரதியார் என்னைப்பற்றி பாடிய ஓர் வரி இன்னும் என் செவிகளை இனிமையாக்கிய வண்ணம் உள்ளது. பின் ஓர் இரவில் கரிய பெண் அழகி ஒருத்தி வந்தாள். சற்றே அருகிற் சென்று பார்த்தேன். அன்னை வடிவம் அவள். இவள் ஆதி பாராசக்தி அவள் இன்னருள் வேண்டும் பின் யாவும் உலகில் வசப்பட்டுப் போமடா
சாதனா பாடல் அழகாகவே உள்ளது. மகாகவி அல்லவா அவர். தாயே சிலர் கத்தியை தீட்டாதே உன்தன் புத்தியை தீட்டு என்கிறார்களே அப்படியானால் வீரம் எதற்கு. ?
துர்க்கா அது சரி கத்தி தான் வீரம் ஆயுத பலம்தான் வீரம் என்ற தவறான அணுகு முறை உள்ளதுதான்.அது தவறு மன வலிமையும் புத்தி சாதுரியமும்தான் உண்மையான வீரம். இதுதான் இன்றைய ஆயுத கலாச்சாரத்திலிருந்து விலகி நடந்தால் வெற்றிகளை கொணர்ந்து குவிக்கும்.இதனை நீங்கள் நேசிக்கும் தமிழ் ஈழத்தில் கண்டு தானே வருகின்றீர்கள். மெலியாரை வலியார் அடக்குவது வீரமாகாது.
சாதனா தாயே வெற்றி வேண்டுமானால் வீரம் விளையாட வேண்டும் என்கிறார்களே அதன் விளக்கம்
துர்க்கா ஆமாம் நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் பெற்று மக்கள் அந்நிய ஆட்சிக்கு எதிராக போராட வேண்டும். வீரம் ஒளி வீசும் உலகில் வீரம் இருந்தால் தான் மனிதம் மதிக்கப்படும். உரிமைகள் கிடைக்கும். வீரம் அறத்தோடும் அன்போடும் பிணைக்கப்பட்டுள்ளது.நல்லவரானால் நல் உபதேசம் . பகைவரானால் வாள் முனையில் சந்திப்பு.
சாதனா கொற்றவைத்தாயே அறத்தையும் மறத்தையும் புலப்படுத்தவே வாயில் வேதமும் கையில் வாளும் கொண்டுள்ளாய். நாமும் அறத்தோடு சேர்ந்த வீரத்தை விளைத்தே விடுதலையை வென்றிடுவோம். விடுதலையின் காப்பு வீர உணர்ச்சிதான். அந் மாவீரத்தை போதிக்கும் வீரத் தாயே உனக்கு வீர வணக்கங்கள் MOON தொலைக்காட்சி நிலையத்தார் சார்பில் நன்றி கூறி விடை பெறுகின்றேன்.
ஆக்கம் திருமதி ஆன் பிரான்சிஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக