திங்கள், 27 செப்டம்பர், 2010

தமிழ்மொழி வாழ்த்து (பாடசாலை கீதம்)

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே
வானம் அளந்ததனைத்தும் அளந்திடும்
வண் மொழி வாழியவே

ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்க தமிழ் மொழி ஒங்கத்
துலங்குக வையகமே
தொல்லை வினை தரு தொல்லையகன்று
சுடர்க தாய் நாடே
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே
வானம் அளந்ததனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழியவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக