திங்கள், 27 செப்டம்பர், 2010

எண்களில் தோன்றிய என் எண்ணங்கள்(பவிசன் )

ஒன்றே ஒன்று
ஒருவனே தேவன் என்று நீயும் நம்பு

ஒன்றும் ஒன்றும் இரண்டு
ஒன்றாய் சேர்வீர் திரண்டு

இரண்டும் ஒன்றும் மூன்று
இயல் இசை நாடகம் என
முத்தமிழ் மூன்று என முழங்கு

மூன்றும் ஒன்றும் நான்கு
நாலும் தெரிந்தவன் நீ என
நானிலத்தில் நற்பெயர் வாங்கு

ஐந்தும் ஒன்றும் ஆறு
ஆறாம் ஆறிவைத்தேடு

ஆறும் ஒன்றும் ஏழு
ஏழு பிறப்பும் நாட்டுப்பற்றோடு எழு

ஏழும் ஒன்றும் எட்டு
எட்டு திக்கும் செல்
தமிழ் செல்வங்கள் யாவும் கொணர்ந்து
இங்கு கொட்டு

எட்டும் ஒன்றும் ஒன்பது
இருப்பதை பகிர்ந்து உண்பது
என உன் வாழ்வில் உறுதி கொள்

ஒன்பதும் ஒன்றும் பத்து
பரமன் பாதத்தை பற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக