திங்கள், 27 செப்டம்பர், 2010
தமிழ்மொழி வாழ்த்து (பாடசாலை கீதம்)
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே
வானம் அளந்ததனைத்தும் அளந்திடும்
வண் மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்க தமிழ் மொழி ஒங்கத்
துலங்குக வையகமே
தொல்லை வினை தரு தொல்லையகன்று
சுடர்க தாய் நாடே
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே
வானம் அளந்ததனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழியவே
வாழிய வாழியவே
வானம் அளந்ததனைத்தும் அளந்திடும்
வண் மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்க தமிழ் மொழி ஒங்கத்
துலங்குக வையகமே
தொல்லை வினை தரு தொல்லையகன்று
சுடர்க தாய் நாடே
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே
வானம் அளந்ததனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழியவே
எண்களில் தோன்றிய என் எண்ணங்கள்(பவிசன் )
ஒன்றே ஒன்று
ஒருவனே தேவன் என்று நீயும் நம்பு
ஒன்றும் ஒன்றும் இரண்டு
ஒன்றாய் சேர்வீர் திரண்டு
இரண்டும் ஒன்றும் மூன்று
இயல் இசை நாடகம் என
முத்தமிழ் மூன்று என முழங்கு
மூன்றும் ஒன்றும் நான்கு
நாலும் தெரிந்தவன் நீ என
நானிலத்தில் நற்பெயர் வாங்கு
ஐந்தும் ஒன்றும் ஆறு
ஆறாம் ஆறிவைத்தேடு
ஆறும் ஒன்றும் ஏழு
ஏழு பிறப்பும் நாட்டுப்பற்றோடு எழு
ஏழும் ஒன்றும் எட்டு
எட்டு திக்கும் செல்
தமிழ் செல்வங்கள் யாவும் கொணர்ந்து
இங்கு கொட்டு
எட்டும் ஒன்றும் ஒன்பது
இருப்பதை பகிர்ந்து உண்பது
என உன் வாழ்வில் உறுதி கொள்
ஒன்பதும் ஒன்றும் பத்து
பரமன் பாதத்தை பற்று.
ஒருவனே தேவன் என்று நீயும் நம்பு
ஒன்றும் ஒன்றும் இரண்டு
ஒன்றாய் சேர்வீர் திரண்டு
இரண்டும் ஒன்றும் மூன்று
இயல் இசை நாடகம் என
முத்தமிழ் மூன்று என முழங்கு
மூன்றும் ஒன்றும் நான்கு
நாலும் தெரிந்தவன் நீ என
நானிலத்தில் நற்பெயர் வாங்கு
ஐந்தும் ஒன்றும் ஆறு
ஆறாம் ஆறிவைத்தேடு
ஆறும் ஒன்றும் ஏழு
ஏழு பிறப்பும் நாட்டுப்பற்றோடு எழு
ஏழும் ஒன்றும் எட்டு
எட்டு திக்கும் செல்
தமிழ் செல்வங்கள் யாவும் கொணர்ந்து
இங்கு கொட்டு
எட்டும் ஒன்றும் ஒன்பது
இருப்பதை பகிர்ந்து உண்பது
என உன் வாழ்வில் உறுதி கொள்
ஒன்பதும் ஒன்றும் பத்து
பரமன் பாதத்தை பற்று.
ஞாயிறு, 26 செப்டம்பர், 2010
திருமகள்களின் பேட்டித் தொடர்
சாதனா...... சரி தாயே நன்றி . அறிவாற்றலாலேயே அனைத்தையும் சாதிக்கலாமென அறிவுறுத்தினாள் கலைமகள். இவ்விடத்தில் மகாகவியின் பாடல் ஒன்றுநினைவுக்கு வருகின்றது .பிள்ளைப்பிராயத்திலே கலைமகளின் பெண்மையைக்கண்டு மயங்கி விட்டேன் அவள் உருவம்கண்டு வெள்ளை மனது பறிகொடுத்தேன் எனக்கலைமகள் அழகை அழகாக வர்ணித்திருந்தார்.
அடுத்து இலட்சுமி தாயே வணக்கம். தங்களை MOON தொலைக்காட்சி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்.
சாம்பவி..... என்னை இலக்குமி திருமகள் என்று அழைப்பார்கள் செல்வத்திற்கு அதிபதி நான்தான்.
சாதனா தாயே வேதாந்திகள் பணத்தை குறைகூறுகின்றார்களே பணம் நிலையற்றது அது ஒரு நாள் தன்னை நம்பியவர்களை விட்டு செல்வதனால் அதற்கு செல்வம் என்று பெயர் ஏற்பட்டதாகவும் வாதிடுகிறார்களே இது பற்றி தங்களின் கருத்துயாது.
சாம்பவி பணம் இல்லாமல் உலகம் அழிந்து போவதைக்கண்டால் அதே வேதாந்திகள் ஐயோ செல்வத்தை ஈட்டுங்கள் உலகம் அழிகிறது என கூப்பாடு போடுவார்கள். செல்வம் என்பதை பிழையாக விளங்கிக்
கொள்கிறார்கள். சிந்தையின் நிறைவே செல்வம். அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால் அற்குப ஆங்கே செயல்.
அதாவது செல்வோம் என புறப்படத்தாயராகும் அச்செல்வத்தை கொண்டு நல்ல செயல்களைச் செய்து அதன் வெளியேற்றத்தை தடுக்க வேண்டும்என வள்ளுவப்பெருந்தகை கூறுகின்றார். இதனை வேதாந்திகள் புரிந்து கொண்டால் சரி.
சாதனா ஒரு வேளை பணம் பாதாளம் வரை பாயலாம்.ஆனால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும் எங்கும் சொல்லப்பட
வில்லையே.வாழ்க்கைக்கு பணம் வளமான ஊற்றுதான். உலகிலுள்ள அனைத்தையும் பெறுவதற்கு அடிப்படையாக அமைவது செல்வம்தான். ஆனால் அதனை முறையாக ஈட்ட வேண்டும். பணம் வாழ்வின் ஒரு துணை வாழ்க்கையை அதற்குள் அடகு வைக்கக்கூடாது. பணத்தின் வழியாக இம்மை மறுமைப் பயன்களைத் தேடுவதே மகத்தான பண்பாகும்.
சாதனா அடுத்து துர்க்கா தேவியே வணக்கம். MOON தொலைக்காட்சி நேயர்களுக்கு தங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
துர்க்கா வணக்கம். என்னை காளி மலைமகள் பாராசக்தி வெற்றித்தாய் என பல பெயரிட்டு அழைப்பார்கள். வீரத்திற்கு அதிபதி நான் உங்கள் உலகைச் சேர்ந்த மகாகவி பாரதியார் என்னைப்பற்றி பாடிய ஓர் வரி இன்னும் என் செவிகளை இனிமையாக்கிய வண்ணம் உள்ளது. பின் ஓர் இரவில் கரிய பெண் அழகி ஒருத்தி வந்தாள். சற்றே அருகிற் சென்று பார்த்தேன். அன்னை வடிவம் அவள். இவள் ஆதி பாராசக்தி அவள் இன்னருள் வேண்டும் பின் யாவும் உலகில் வசப்பட்டுப் போமடா
சாதனா பாடல் அழகாகவே உள்ளது. மகாகவி அல்லவா அவர். தாயே சிலர் கத்தியை தீட்டாதே உன்தன் புத்தியை தீட்டு என்கிறார்களே அப்படியானால் வீரம் எதற்கு. ?
துர்க்கா அது சரி கத்தி தான் வீரம் ஆயுத பலம்தான் வீரம் என்ற தவறான அணுகு முறை உள்ளதுதான்.அது தவறு மன வலிமையும் புத்தி சாதுரியமும்தான் உண்மையான வீரம். இதுதான் இன்றைய ஆயுத கலாச்சாரத்திலிருந்து விலகி நடந்தால் வெற்றிகளை கொணர்ந்து குவிக்கும்.இதனை நீங்கள் நேசிக்கும் தமிழ் ஈழத்தில் கண்டு தானே வருகின்றீர்கள். மெலியாரை வலியார் அடக்குவது வீரமாகாது.
சாதனா தாயே வெற்றி வேண்டுமானால் வீரம் விளையாட வேண்டும் என்கிறார்களே அதன் விளக்கம்
துர்க்கா ஆமாம் நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் பெற்று மக்கள் அந்நிய ஆட்சிக்கு எதிராக போராட வேண்டும். வீரம் ஒளி வீசும் உலகில் வீரம் இருந்தால் தான் மனிதம் மதிக்கப்படும். உரிமைகள் கிடைக்கும். வீரம் அறத்தோடும் அன்போடும் பிணைக்கப்பட்டுள்ளது.நல்லவரானால் நல் உபதேசம் . பகைவரானால் வாள் முனையில் சந்திப்பு.
சாதனா கொற்றவைத்தாயே அறத்தையும் மறத்தையும் புலப்படுத்தவே வாயில் வேதமும் கையில் வாளும் கொண்டுள்ளாய். நாமும் அறத்தோடு சேர்ந்த வீரத்தை விளைத்தே விடுதலையை வென்றிடுவோம். விடுதலையின் காப்பு வீர உணர்ச்சிதான். அந் மாவீரத்தை போதிக்கும் வீரத் தாயே உனக்கு வீர வணக்கங்கள் MOON தொலைக்காட்சி நிலையத்தார் சார்பில் நன்றி கூறி விடை பெறுகின்றேன்.
ஆக்கம் திருமதி ஆன் பிரான்சிஸ்

திருமகள்களின் பேட்டி
சாதனா. MOON தொலைக்காட்சி நேயர்களுக்கு எனது வணக்கம். இன்று வாணி விழா. சிறிது வித்தியாசமாக வானத்திலிருந்து வாணி விழாவை முன்னிட்டு மூவர் இந்நிலையத்திற்கு வந்துள்ளனர் . அவர்களை MOON
தொலைக்காட்சி நேயர்களுக்காக பேட்டி காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வணக்கம் சரஸ்வதி தாயே ! MOON தொலைகாட்சி நிலையத்தார் சார்பிலும் நேயர்கள் சார்பிலும் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தங்களை முதலில் நேயர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
விஸ்ணுயா..... வணக்கம் நான்தான் கல்வி தெய்வம் சரஸ்வதி தேவி. என்னை கலைமகள் என்றும் அழைப்பர்.
சாதனா.... தாங்கள் பூவுலகம் நோக்கி வரக் காரணம் .
விஸ்ணுயா..... தமிழர்கள் விழா எடுப்பதில் விண்ணர்கள். ஆனால் அவ்விழாவுக்கான கருவை கோட்டைவிட்டுவிடுவார்கள் நிறைய முறைப்பாடுகள் வானகத்திற்கு வந்து குவிந்துள்ளன.எனவே எமது பொறுப்பாளர் எம்மை நேரில் சென்று பார்த்து வரும்படி அனுப்பினார். இடையில் உங்கள் தொலைக்காட்சி நிலையத்தார் கமராவுடன் அலைந்தனர் கண்களில் நாம் பட நம்மை இங்கு கொண்டு வந்து விட்டனர்.
சாதனா....... சரி முறைப்பாடுகள் என்கிறீர்களே அவை என்ன என நேயர்களுக்கு விளக்குவீர்களா?
விஸ்ணுயா..... கைப்பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி என்று உங்கள் ஔவைப்பாட்டியே கொன்றை வேந்தனில் சொல்லியுள்ளார். அதாவது கையிலுள்ள செல்வத்தைக்காட்டிலும் கல்வியே சி்றந்தது என்பது இதன் பொருள். ஆனால் இன்றைய மனிதன் கல்வியையே விலை பேசுகிறான்.
சாதனா....... இதில் தவறு என்ன சரஸ்வதி தாயே இன்றைய உலகு பொருள் முதல் வாத உலகு . காசேதான் கடவுளடா அது கடவுளுக்கும் தெரியுமடா என ஒரு கவிஞன் பாடியுள்ளான். கூழுக்காக கவி பாடியவள் தானே ஔவைப்பாட்டி. ஆடையின்றி வாடையில் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்தி பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனைக்கண்டனம் என்று கூறுவாய் என செங்கால் நாரைஎன்னும் பறவையை தூவிட்ட சக்தி முற்றப்புலவரின் தாங்கள் அறியாததல்ல.ஒருவேளை கஞ்சிக்காக வைத்திருந்த ஒரு பிடி நெல்லையும்
குருவிகளுக்காக போட்டு விட்டு கவிதையையே வயிற்றுக்கு உணவாக்கிய மாகாகவி பாரதியாரின் ஏழ்மையின் துடிப்பைதாங்கள் உணர்ந்தவர் தானே ஆகவே ஏட்டைக் கையிலெடுத்த பல புலவர்களுக்கு எல்லாம் தாங்கள் திருவோட்டைத்தானே பரிசளித்தீர்கள்.
விஸ்ணுயா...... இல்லை இல்லை நல்வாழ்வின் அடிப்படை கல்விதான் நீங்கள் எடுத்துக்காட்டிய இதே புலவர்களுக்காக பெருஞ் செல்வமும் படைபலமும் கொண்ட அரசர்களே தலை வணங்கியுள்ளனர். ஒருவரின் வாழ் நாள் அதிகரிப்பதென்பது அரிது. அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது அத்தகைய வாழ் நாளை அதிகரிக்கும் ஒரே ஒரு நெல்லிக்கனியை தான் உண்ணாமல் கல்வியிற் சிறந்த ஔவையாருக்கே அளித்து கல்வியை சிறப்பித்தான் அதியமான் என்னும் அரசன்.செங்கல் நாரை தூது செல்ல முன்பே பாண்டிய அரசன் சத்தி முற்ற புலவரின் வறுமையை போக்கி புலவரின் அருமையை உணர்ந்தான், முடியுடை மூவேந்தர் முதற்கொண்டு பலரும் தம் அரண்மனைகளில் கல்விமான்களுக்கே முதலிடம் அளித்து கல்வியை சிறப்பித்த எத்தனையோ வரலாறு நம்மிடையே உண்டு .ஆனால் இன்றைய தமிழன் படிப்பு வேறு வாழ்க்கை வேறு என பிரித்து வாழ்கிறான். கல்வியைக் கொண்டு வாழ்க்கைக்கு தேவையான செல்வம் உட்பட அனைத்தையும் சம்பாதிக்க முடியும். ஆனால் அவர்கள் தவறாக பயன் படுத்துவதைக்கண்டிக்கவே வந்தோம்.
தொடரும்

சனி, 25 செப்டம்பர், 2010
புதிய அறிவித்தல்கள்
சரஸ்வதி பூசை 17.10.2010 அன்று பாடசாலை மட்டத்தில் நடை பெறும்.
14.11.2010 அன்று திருக்குறள் போட்டிகள் நடை பெறும்.வெற்றி பெறுபவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்களின் படங்கள் இங்கு பிரசுரிக்கப்படும்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010
பாடங்களின் நேர அட்டவணை
நேரம் பாடங்கள்
10.00- 11.45 தமிழும் சமயமும்
11.45- 12.00 இடை வேளை
12.00- 12.45 நடனம் சுரத்தட்டு 1 கணிதம் 1 கணிதம்11
12.45--13.30 வாய்ப்பாட்டு சுரத்தட்டு 11 விஞ்ஞானம் ஆங்கிலம் 1
13.30--14.15 வயலின் சுரத்தட்டு 111 ஆங்கிலம்11 மிருதங்கம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
.jpg)