செவ்வாய், 16 நவம்பர், 2010

கிறிஸ்மஸ் விழா 2010 கவிதை

வீட்டில் எப்போது

காலம் மார்கழி 
நேரம் நடுச்சாமம்
வண்ணமகள் என் சின்னமகள்
ஓடி வந்தாள் 
அம்மா 
கன்னியின் மடியில் 
புன்னகை மன்னன் 
பிறந்து விட்டார் 
காட்டினர்  ரீ.வி.யில்
வாடியது முகம்
ஆண்டாண்டு காலம் 
மாடடைக் குடில்தான் 
மாபரன் யேசுவின் பிறப்பிடமோ
எப்போது எங்கள் வீட்டில் 
தொடுத்தாள் வினா ஒன்று 


அநீதிக்காக  குரல் கொடுக்கும் போது 
நீதியை நிலை நாட்டும்போது
சாதி பேதங்கள் மறையும் போது
நாதியற்றவர்கள் நலம் பெறும் போது
ஏதிலிகள் அக மகிழும் போது
பாவிகள் மனம் திருந்தும் போது
பெண்மையை போற்றும் போது


பணிவிடை பெற அல்லாமல் 
பணிவிடை செய்யும் போது 
மனித மதிப்பீடுகளின்படி வாழும் போது 
நிச்சயம் எம் வீட்டில் 
சாமாதானத்தின்  தேவன் 
வந்து பிறப்பார் பகன்றேன் நான்
புரிந்தும் புரியாததுமாய் 
மெல்லச்சிரித்தாள்  என் சின்னமகள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக